ஏற்காடு மலைப்பாதையில் உருண்டு விழுந்த பாறை: 5 மணி நேரத்திற்குப்பின் அகற்றம்

சேலம் ஏற்காடு மலைப்பாதையில் உருண்டு விழுந்த பாறையை 5 மணி நேர போராட்டத்திற்கு பின் நெடுச்சாலைத்துறையினர் உடைத்து அகற்றினர்.

Update: 2021-09-24 06:15 GMT

ஏர்காடு மலைப்பாதையில் உருண்டு விழுந்த பாறையை அகற்றும் நெடுஞ்சாலைத்துறையினர்.

சுற்றுலா தளமான ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த இரண்டு நாட்களில் ஏற்காடு மலைப்பகுதியில் மட்டும் 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.  

இதன் காரணமாக, மலைப்பாதையில்  ஆங்காங்கே சிறிய அருவிபோல் தண்ணீர் கொட்டுகிறது. இந்த நிலையில் நேற்றிரவு பெய்த மழை காரணமாக அடிவாரத்திலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் மலைப்பாதையில் பாறை ஒன்று உருண்டு விழுந்தது. 

இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் அதிகாலை முதல் 5 மணி நேரம் போராடி பாறையை உடைத்து அகற்றினர். இந்தப் பணிகள் காரணமாக மலைப்பாதையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மழைக்காலம் என்பதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் மலைப்பாதையை கடக்க வேண்டுமென வருவாய் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News