ஏற்காட்டில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: ஆட்சியர் அதிரடி
ஏற்காட்டில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அகற்றப்பட்டது.
ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காட்டிற்கு வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம். அப்போது அண்ணா பூங்கா, படகு இல்ல ஏரி, ஒண்டிகடை ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் இருபுறமும் தள்ளுவண்டி கடைகள் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட வண்ணமே இருந்தது.
இதனால் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுமாறு நெடுஞ்சாலைத்துறை சார்பில் வியாபாரிகளுக்கு ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இருந்த தள்ளுவண்டிக் கடைகள் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர்.