சேலத்தில் வீடுகளை சூழ்ந்த மழை வெள்ளம்: பொதுமக்கள் சாலை மறியல்
சேலம் கே.கே நகர் குடியிருப்பு பகுதியில் மழைநீருடன் கழிவுநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;
சேலம் - ஏற்காடு பிரதான சாலை கே.கே நகர் குடியிருப்பு பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்த பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மழை நீர் மற்றும் சாக்கடை நீர் முழுவதும் வெளியேறாமல் வீடுகளைச் சுற்றி சூழ்ந்து உள்ளது.
மேலும் ஐம்பதுக்கு மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்த நிலையில் இதுவரை மழைநீர் வெளியேற்ற மாநகராட்சி அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாத காரணத்தினால் அப்பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஏற்காடு பிரதான சாலை அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த கன்னங்குறிச்சி காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.
முறையான சாக்கடை வசதி கோரி பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும், அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது மழை நீர் சூழ்ந்துள்ளதால் வீட்டை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். தேங்கியுள்ள மழை நீரில் விஷ பூச்சிகள் வீட்டுக்குள் புகுந்து விடுகிறது இதனால் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.