ஏற்காட்டில் நடிகர் அசோக்குமார் நடிக்கும் புதிய படத்திற்கான பூஜை துவக்கம்
ஏற்காட்டில் நடிகர் அசோக்குமார் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றது.;
நெப்டியூன் எண்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படம் "PRODUCTION NO.1. மலை பிரதேசத்தில் அடுத்தடுத்து நடக்கின்ற விசித்திரமான கொலைகளை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் அஷோக்குமார் நாயகனாகவும், தர்ஷாகுப்தா நாயகியாகவும், டைகர் தங்கதுரை, அங்காடித்தெரு மகேஷ் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தை இளம் இயக்குனர் குருசேனாபதி என்பவர் இயக்குகிறார்.
மேலும் இத்திரைப்படத்தில் ஒளிப்பதிவு - இன்ஃபான்ட் பரத், இசை - ஜெய்கிருஷ்ணா, நிர்வாக தயாரிப்பு ஒருங்கிணைப்பு ராமநாதன்.ரா, பப்ளிசிட்டி : ஈரோடு அபிலாஷ் ஆகியோர் இப்படத்தில் இணைந்து பணியாற்றுகின்றனர்.
இந்நிலையில் இந்த திரைப் படத்திற்கான பூஜை சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் உள்ள முருகன் கோவிலில் சிறப்பாக நடைபெற்றது. இந்த பூஜையில் படத்தின் நாயகன், நாயகி மற்றும் துணை நடிகர்கள் என பலர் பங்கேற்றனர். இந்த திரைப்படம் ஏற்காடு, மலேசியா மற்றும் பல இடங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.