இளைஞர்களுடன் சேர்ந்து பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றிய எம்எல்ஏ

ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் இந்த பணி செய்து பிளாஸ்டிக் இல்லாத ஏற்காட்டை உருவாக்குவோம் என இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

Update: 2021-12-26 08:30 GMT

பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றிய இளைஞர்கள் மற்றும் எம்எல்ஏ அருள்.

சேலம் மாவட்டம் ஏற்காடு சுற்றுலா தளத்திற்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். இந்நிலையில் மலைகள் மற்றும் சாலையோரங்களில் சுற்றுலா பயணிகள் பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்களில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்கள் அதிகளவில் குவிந்துள்ளது. 

இதனை தூய்மைப்படுத்தும் முயற்சியாக இன்று பள்ளி மாணவர்கள் மற்றும் பசுமைத்தாயகம் அமைப்பினர் இணைந்து ஏற்காடு மலைப்பாதையில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களை அகற்றும் பணியை தொடங்கினர். இந்த நிகழ்ச்சியில் சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருள் கலந்துகொண்டு இளைஞர்களுடன் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணியை மேற்கொண்டார். தொடர்ந்து ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் இந்த பணி செய்து பிளாஸ்டிக் இல்லாத ஏற்காட்டை உருவாக்குவோம் என இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News