ஏற்காடு மலைப்பாதையின் பல இடங்களில் மண் சரிவு: போக்குவரத்து முடக்கம்

ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் அவ்வழியே போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது.

Update: 2021-11-05 08:30 GMT

 மலைப்பாதையில் ஏற்பட்டுள்ள மண் சரிவுகள்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு ஏற்காடு பகுதியில் 10.மி.மீ அளவிற்கு மழை பெய்ததன் காரணமாக, குப்பனூர் வழியாக ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வழியே போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டு மண் சரிவை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டுள்ளனர்.  

இதனால்  குப்பனூர் வழியாக செல்லும் வாகனங்கள் அடிவாரம் வழியாக ஏற்காடு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் குப்பனூர் அடிவார பகுதியில் உள்ள விளை நிலங்களிலும் அதிக அளவில் தண்ணீர் புகுந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். 

இந்த நிலையில், மலைப்பாதையில் ஏற்பட்டுள்ள மண் சரிவுகளை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து மீட்பு பணிகளை துரிதப்படுமாறு கேட்டுக்கொண்டார். ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

குப்பனூர் ஏற்காடு சாலையில் சேதங்களை கணக்கிட பொறியாளர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், சாலையில் சரிந்து கிடக்கும் பார்வைகளை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News