ஏற்காட்டில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கும் பணி தீவிரம்
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.;
கொரோனோ இரண்டாம் அலை சேலத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஏற்காடு தாலுக்காவில் உள்ள கொரோனா பாதித்த நோயாளிகளை, சிகிச்சைக்காக சுமார் முப்பது கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் நிலை இருந்தது.
இந்த அவல நிலையை மாற்றும் விதமாக, ஏற்காடு படகு இல்லம் அருகேயுள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவியர் தங்கும் விடுதி, தற்போது சுமார் 100 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை, ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் சித்ரா, வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.அ) குணசேகரன், ஏற்காடு டவுன் பஞ்சாயத்து தலைவர் சிவசக்தி ரவிச்சந்திரன் உள்ளிட்டவர்கள் மேற்பார்வையிட்டனர்.