10 கி.மீட்டர் நடந்து வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கிய வார்டு உறுப்பினர்கள்

அடிப்படை வசதிகளை ஏற்படுத்தாத ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 10 கி.மீட்டர் நடந்து புகார் அளித்த வார்டு உறுப்பினர்கள்.;

Update: 2021-08-17 14:00 GMT

சேலம் ஆண்டிப்பட்டி ஊராட்சியில்  தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி என்பவர் பதவியேற்று 20 மாதங்களாகியும் பொதுமக்களின் குறைகளை தீர்க்கவும், வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கிராம பொதுமக்கள் கேள்வி கேட்பதாக கூறி, 5 வார்டுகளை சேர்ந்த உறுப்பினர்கள் ஆண்டிப்பட்டி கிராமத்திலிருந்து கோரிக்கை மனுக்களை கைகளில் ஏந்தியவாறு 10 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

குறிப்பாக 15வது நிதிக்குழு மூலம் ஊராட்சிகளுக்கு வர பெற்றுள்ள சுமார் 35 லட்சம் நிதி கிடப்பில் உள்ளது. அதனை எடுத்து ஆண்டிபட்டி கிராம மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளான குடிநீர், தெருவிளக்கு, சாக்கடை வசதிகள் உள்ளிட்ட வளர்ச்சி பணிகளுக்கு செலவிட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் ஆண்டிப்பட்டி ஊராட்சியில் உள்ள 9-வார்டு உறுப்பினர்களை சேர்ந்தவர்களை மக்கள் கேள்வி கேட்பதாக வேதனை தெரிவித்தனர். எனவே சேலம் மாவட்ட ஆட்சியர் ஆண்டிபட்டி ஊராட்சியில் உள்ள கிராம மக்களுக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

Tags:    

Similar News