மலைவாழ் மக்கள் பயன்பாட்டுக்கு 2 ஆக்சிஜன் செரிவூட்டிகள் வழங்கல்

கம்மாளப்பட்டியில் உள்ள மலைவாழ் மக்களின் பயன்பாட்டுக்காக, 2 ஆக்சிஜன் செரிவூட்டிகளை சேலம் எம்பி பார்த்திபன் வழங்கினார்.

Update: 2021-05-31 12:58 GMT

கம்மாளப்பட்டியில் உள்ள மலைவாழ் மக்களின் பயன்பாட்டுக்காக 2 ஆக்சிஜன் செரிவூட்டிகளை, சேலம் எம்பி பார்த்திபன் வழங்கினார்.

சேலம் மாவட்டத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. ஏராளமானோர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆக்சிஜன் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

இந்நிலையில் கம்மாளப்பட்டியில் உள்ள மலைவாழ் மக்களின் பயன்பாட்டுக்காக,  பாரதியார் மக்கள்நல்வாழ்வு சங்கம் சார்பில் , அப்பகுதியில் செயல்பட்டு வரும் 10 படுக்கைகள் கொண்ட மலைவாழ் மக்களின் மருத்துவமனைக்கு, இந்தியவாழ் தாய்வான் மக்கள் மற்றும் இந்தியன் தமிழ் சங்கம் சார்பில் வழங்கிய,  2 ஆக்சிஜன் செறிவூட்டிகளை, சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் வழங்கினார்.

இதன்மூலம் வீரபாண்டி தொகுதிக்கு உட்பட்ட கம்மாளப்பட்டி, தும்மல்பட்டி, குரால் நத்தம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரம் மலைவாழ் மக்கள், யாருக்கேனும் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஆக்சிஜன் தேவை ஏற்பட்டால், அவர்களுக்கு இந்த கருவி மூலம் ஆக்சிஜன் வழங்கப்பட்டு உயர் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்படுவார்கள் என, பாரதியார் மக்கள்நல்வாழ்வு சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News