சேலத்தில் அதிமுக செயலாளர் உள்பட 300க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைவு

சேலத்தில் அதிமுக செயலாளர் உள்பட 300க்கும் மேற்பட்ட அதிமுகவினர் அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

Update: 2022-01-30 06:30 GMT

சேலத்தில் அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுகவினர்.

சேலம் அதிமுக செயலாளர் கிருஷ்ணன் தலைமையில், அதிமுக தகவல் தொழில் நுட்ப பொருளாளர் அண்ணாதுரை உள்பட 300க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணையும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இதே போன்று சேலம் மாநகராட்சி 1வது கோட்டத்தில் உள்ள மக்கள் நீதி மையத்தை சேர்ந்த 50 க்கும் மேற்பட்டோரும் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், திமுக முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே என் நேரு கலந்து கொண்டு திமுகவில் புதிதாக இணைந்தவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து வரவேற்றார்.

நிகழ்ச்சியில் திமுக முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே என் நேரு பேசும்போது, தமிழ்நாடு முதலமைச்சர் நடத்திவரும் நல்லாட்சிக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் வரும் மாநகராட்சி தேர்தலில் திமுக கூட்டணி அதிகளவில் வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும், பாஜக தமிழக அரசின் மீது தேவையில்லாமல் குற்றச்சாட்டுகளை கூறி வருவதாகவும், குறிப்பாக அரியலூர் மாணவி இறப்பில் தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதன் உண்மை நிலை தற்போது தெரியவந்துள்ளதாகவும்  அமைச்சர் நேருதெரிவித்தார்.

கூட்டுறவு சங்கங்களில் பதவி காலத்தை மூன்று ஆண்டுகளாக குறைத்து நிறைவேற்றிய சட்டம் முன் வடிவில் ஆளுநர் கையொப்பம் விடாமல் இருப்பது, ஏற்கனவே தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரிய சட்டமன்றத் தீர்மானத்தை ஜனாதிபதிக்கு அனுப்பாமல் இருப்பது போன்ற பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் இது போன்று பாஜக அரசு தொடர்ந்து தமிழகத்திற்கு பல்வேறு சங்கடங்களை கொடுத்தாலும் அதனை எதிர்த்து தமிழக முதலமைச்சர் நல்லாட்சி புரிந்து வருவதாகவும், இது உள்ளாட்சியிலும் தொடர அனைவரும் முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும் என்று  கேட்டுக்கொண்டார்.

Tags:    

Similar News