சேலம் இரும்பாலை கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் - அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு

சேலம் இரும்பாலை பகுதியில் நடைபெற்று வரும் இரண்டாவது கொரோனா சிறப்பு சிகிச்சை மைய பணிகளை, அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2021-06-06 14:20 GMT

சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, சேலம் இரும்பாலை வளாகத்தில் முதல்கட்டமாக 500 படுக்கை வசதி கூடிய சிகிச்சை மையம், கடந்த வாரம் துவக்கப்பட்டது. இதில் தற்போது 300க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதன் அருகிலேயே மேலும்  500 ஆக்சிஜன்  படுக்கை வசதி கொண்ட சிறப்பு கொரோனா சிகிச்சை மையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து, அதற்கான பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது.

இப்பணிகள் 70% முடிவடைந்த நிலையில், தமிழக மின்துறை அமைச்சரும், சேலத்திற்கான பொறுப்பு அமைச்சருமான செந்தில் பாலாஜி, இன்று இரண்டாவது சிகிச்சை மையம் அமைக்கப்படும் இடத்திற்கு நேரடியாக சென்று, பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மையம் அமைப்பதற்கான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். அனைவருக்கும் தரமான சிகிச்சை கிடைக்க மருத்துவர்கள் உறுதி ஏற்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை மருத்துவர்களுக்கும்  அதிகாரிகளுக்கும் வழங்கினார். 

ஆய்வின் சேலம் பாராளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன்,  சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News