மக்களை தேடி மருத்துவம் திட்டம்: வீடு தேடி சென்று வழங்கிய சுகாதாரத்துறை அமைச்சர்
சேலம் மல்லூர் அருகே நோயாளிகளின் வீடுகளை தேடி சென்று மருந்து பெட்டகங்களை சுகாதாரத்துறை அமைச்சர் வழங்கினார்.
தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவம் என்ற புதிய திட்டத்தை கடந்த 5- ம் தேதி அன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலமாக பொதுமக்களின் வீடுகளுக்கே மருத்துவர்கள் சென்று பொதுமக்களின் உடல் நிலையை பரிசோதித்து மருத்துவம் பார்க்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தினர்.
இத்திட்டம் முறையாக மக்களுக்கு கிடைக்கப் பெறுகிறதா? என்பது குறித்து பல்வேறு மாவட்டங்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சேலம் மல்லூர் அருகே உள்ள சந்தியூர் ஆட்டையாம்பட்டி பகுதியில் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு முறையாக மருத்துவ வசதிகள் கிடைக்கிறதா? என்பது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வீடு வீடாக சென்று மக்களிடம் கேட்டறிந்தார்.
மேலும் கொரோனா பரவலை கட்டுபடுத்த பொதுமக்கள் அரசு அறிவித்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் சமூகநலத் துறை சார்பாக காட்சிப்படுத்திருந்த ஊட்டச் சத்தை அதிகரிக்கும் காய்கறி வகைகள், உணவு பொருட்கள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டார்.