காஞ்சிபுரம் டாஸ்மாக் பணியாளர் கொலை: சேலத்தில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம் ஊழியர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து சேலத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் 2 மணிநேரம் கடையை அடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2021-10-05 08:15 GMT

சேலத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் 2 மணிநேரம் கடையை அடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் பகுதியில் நேற்று இரவு  டாஸ்மாக் பணியாளர்களான துளசிதாஸ், ராமு ஆகிய இருவரும் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பும்போது மர்ம நபர்கள் அவர்களை கடுமையாக தாக்கியதில் சம்பவ இடத்திலேயே துளசிதாஸ் என்பவர் உயிரிழந்தார்.  உடனிருந்த ராமு என்பவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் இந்த கொலை தாக்குதல் சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி சேலம் மாவட்டம் முழுவதும் அனைத்து அரசு மதுபான கடைகளையும் காலை 10 மணி முதல் 12 மணி வரை இரண்டு மணி நேரம் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக சேலம் அந்தியூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் மொத்த விற்பனை கிடங்கு முன்பு 100 மேற்பட்ட டாஸ்மாக் பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு அரசு வேலை மற்றும் 50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். 

மேலும் தொடர்ந்து இதுபோன்று டாஸ்மாக் பணியாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் மீண்டும் நடைபெறாத வண்ணம் தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையம் முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News