செக் மோசடி சார்பதிவாளருக்கு சிறைத்தண்டனை

வீரபாண்டி சார்பதிவாளருக்கு செக் மோசடி வழக்கில் ஓராண்டு சிறைதண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-04-10 16:15 GMT

சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்தவர் சோபன்ராஜ். வீரபாண்டி கூட்டுறவுத்துறை சார்பதிவாளராக உள்ளார். இவர் கடந்த 2015 ம் ஆண்டு டி.பெருமாபாளையத்தை சேர்ந்த வியாபாரியான சாமிநாதன் என்பவரிடம் 19.50 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அதற்கு தனியார் வங்கியின் ஒரு காசோலையை வழங்கியுள்ளார்.

அந்த காசோலையை வங்கியில் போட்டபோது பணம் எடுக்க முடியவில்லை. காசோலையை கொடுத்த சார் பதிவாளர் சோபன்ராஜ் தனது காசோலைக்கு பணம் கொடுக்க வேண்டாம் என வங்கிக்கு கடிதம் கொடுத்ததால், வங்கி நிர்வாகம் பணத்தை வழங்கவில்லை. இதுபற்றி 2016 ம் ஆண்டு சேலம் ஜே.எம்.4 கோர்ட்டில் சாமிநாதன், செக் மோசடி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட், செக் மோசடியில் ஈடுபட்ட சார் பதிவாளர் சோபன்ராஜிக்கு ஓராண்டு சிறை தண்டனையும், கடனாக பெற்ற 19.50 லட்சத்தை திரும்ப வழங்கவும் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.

Tags:    

Similar News