ஒருமணி நேரம் பெய்த மழையால் குளிர்ந்தது சேலம் நகரம்

சேலம் நகரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில், ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால், குளிச்சியான சூழல் நிலவுகிறது.

Update: 2021-07-14 14:30 GMT

சேலம் திருவகவுண்டனூர் பைபாஸ் பகுதியில் மழையின் போது குடை பிடித்தபடி சென்ற வாகன ஓட்டிகள்.

காற்றின் திசைவேக மாறுபாடு மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் சேலம் உள்பட 5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டிருந்தது.

இந்நிலையில்,  சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து இன்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. பின்னர், திடீரென வெயிலின் தாக்கம் குறைந்து கருமேகம் சூழ்ந்து காட்சியளித்தது.

முதலில் லேசான மழையாக துவங்கி, பின்னர் ஒருமணி நேரத்திற்கும் மேலாக  கனமழை பெய்தது. குறிப்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சீலநாயக்கன்பட்டி, அஸ்தம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை செய்தது. இந்த மழையால், சேலம் நகரில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News