புதிய கூட்டணிக்கு வாய்ப்பு தாருங்கள் : பாரிவேந்தர் பேச்சு

திராவிட கட்சிகளுக்கு மாறி மாறி வாக்களித்தது போதும் புதிய கூட்டணிக்கு வாய்ப்பு தாருங்கள் உன்று சேலத்தில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் பேசினார்.;

Update: 2021-03-29 13:30 GMT

சேலம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மையம் இந்திய ஜனநாயக கட்சி மற்றும் சமத்துவ மக்கள் கட்சி இணைந்து புதிய கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

இந்திய ஜனநாயக கட்சியில் வீரபாண்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அமுதா ராஜேஸ்வரன் என்பவர் போட்டியிடுகிறார் இவர் தனது தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாக சென்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்தநிலையில் வீரபாண்டி சட்டமன்ற வேட்பாளரை ஆதரித்து இந்திய ஜனநாயக் கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் பனமரத்துப்பட்டி பகுதியில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது அவர் பேசியதாவது : மக்கள் நீதி மையம், சமத்துவ மக்கள் கட்சி, மற்றும் இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை இணைந்து புதிய கூட்டணியை இந்த தேர்தலை உருவாக்கி உள்ளது.

நல்லவர்கள் நல்ல நோக்கங்களைக் கொண்டு நல்லவர்களால் உருவாக்கப்பட்ட இந்த கூட்டணி, மக்கள் நலனில் அக்கறை கொண்டது. கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக திராவிட கட்சிகளுக்கு மாறி மாறி வாக்களித்தன் காரணமாக தற்போது தமிழகத்தில் இரு கட்சிகளும் ஊழலில் சிக்கித் தவிக்கிறது என்றும் தமிழகம் கடனில் மூழ்கி இருப்பதாகவும் தெரிவித்தார்.

மக்கள் இரண்டு கட்சிகளுக்கும் மாறி மாறி வாக்களித்து போதும் என்றும் இனி தமிழகத்தில் ஒரு மாற்றம் உருவாக இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்றும் என அவர் கேட்டுக்கொண்டார்.

அரசியல் கட்சிகள் மாறி மாறி இலவசங்களை அள்ளி வழங்கி வருகின்றனர் இதனால் மக்கள் இயலாதவர்களாக சித்தரிக்கப்படுகின்றனர் . எனவே இனியும் திராவிட கட்சிகளை நம்பி பயனில்லை ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறபோவதில்லை. எனவே நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மையத்தின் தலைமையிலான கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும்.

ஆட்டோ சின்னத்தில் வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் ஐஜேகே வேட்பாளர் அமுதா ராஜேஸ்வரனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பி நாட்டாமங்கலம் வாழப்பாடி பேளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு ஐஜேகே வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

Tags:    

Similar News