சேலத்தில் கொரோனா சிகிச்சை மையத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சேலம் இரும்பாலை வளாகத்தில் 500 ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிறப்பு தற்காலிக சிகிச்சை மையத்தை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Update: 2021-05-20 05:15 GMT

 சேலம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று சதவீதம் அதிகரித்து வருகிறது தினந்தோறும் 600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

 இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள் அனைத்தும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நிரம்பி வழிவதால் மேற்கொண்டு நோயாளிகளை அனுமதிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது .

இதனைக் கருத்திற் கொண்ட மாவட்ட நிர்வாகம் இரும்பாலை வளாகத்தில் 500 ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட தற்காலிக சிகிச்சை மையத்தை ஏற்படுத்த முடிவு செய்தது. இதற்கான பணிகள் கடந்த ஒரு வாரமாக இரவு பகலாக தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த பணிகள் அனைத்தும் தற்போது முடியும் தருவாயில் உள்ளது.

இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் 500 ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட சிகிச்சை மையத்தை அவர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து சிகிச்சை மையத்தின் ஒவ்வொரு பகுதியையும் பார்வையிட்ட முதலமைச்சர் அங்கு அமைக்கப்பட்டுள்ள அடிப்படை மற்றும் மருத்துவ வசதிகளையும் முதலமைச்சர் பார்வையிட்டு அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

 புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த ஆக்சிஜன் சிகிச்சை மையத்தில் 500 பேர் ஒரே சமயத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய மருத்துவ வசதி பெரும் வகையில் விசாலமான படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இன்னும் ஒரு சில நாட்களில் இங்கு நோயாளிகள் அனுமதிக்கப்பட உள்ளதாகவும் இந்த 500 படுக்கை வசதிகள் முழுமையாக நோயாளிகளுக்கு கிடைக்குமானால் சேலம் மாவட்டத்தில் நோய் தொற்று பாதித்தவர்களுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாத சூழ்நிலை உருவாகும்.

 இந்த நிகழ்ச்சியில் சுகாதார துறை அமைச்சர் சுப்பிரமணியம் , மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மாவட்ட ஆட்சியர் கார்மேகம் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News