தொழில்முனைவு மேம்பாடு மற்றும் நிதி அலுவலர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்
இத்துறையில் அனுபவமுள்ள பெண்கள் மற்றும் சமூக ரீதியாக பின் தங்கியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
ஓரிட சேவை மையத்தில் நிரப்பபடவுள்ள தொழில்முனைவு மேம்பாட்டு அலுவலர் மற்றும் தொழில் முனைவு நிதி அலுவலர் ஆகிய இரண்டு ஒப்பந்த பணியிடங்களுக்கு நேர்காணல் நடத்தவுள்ளதால் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது .
சேலம் மாவட்டம் , தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் , ஓமலூர் , தாரமங்கலம் , மேச்சேரி , பனமரத்துப்பட்டி , வீரபாண்டி , ஆத்துார் மற்றும் சங்ககிரி ஆகிய 7 ஒன்றியங்களில் செயல்படுகிறது . இதில் ஓரிட சேவை மையத்தில் நிரப்பபடவுள்ள தொழில்முனைவு மேம்பாட்டு அலுவலர் ( Enterprise Development Officer ) மற்றும் தொழில் முனைவு நிதி அலுவலர் ( Enterprise Finance Officer ) ஆகிய இரண்டு ஒப்பந்த பணியிடங்களுக்கு மாவட்டஆட்சித் தலைவர் தலைமையில் நேர்காணல் நடத்தவுள்ளதால் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது .
மேற்படி விண்ணப்பங்களை https://www.tnrtp.org என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் .விண்ணப்பிக்க விரும்புவோர் 15.11.2021 -ஆம் தேதி பிற்பகல் 5.00 மணி வரை விண்ணப்பத்தினை மாவட்ட செயல் அலுவலர் , தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் , சேலம் மாவட்ட திட்ட மேலாண்மை அலகு , பழைய நாட்டாண்மை கழக கட்டிடம் , மாவட்ட ஊராட்சி அலுவலகம் , சேலம் - 636001 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும் .
இந்த இரண்டு பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்க பின்வரும் தகுதிகள் இருத்தல் வேண்டும் . ஏதேனும் துறையில் முதுகலை பட்டம் மற்றும் கணிணி திறன் பெற்றிருக்க வேண்டும் . ஓரிட சேவை மையத்தின் பணிகளை செவ்வனே திட்ட பகுதிக்கு உட்பட்ட ஒன்றியங்களில் ஒருங்கிணைக்கும் திறன் பெற்றிருத்தல் வேண்டும் .
தொழில்முனைவு திறனுக்கான தகுதி பெற்றிருத்தல் வேண்டும். ஊரக தொழில் வாய்ப்புகளில் ( வேளாண் , வேளாண் சாராத மற்றும் சேவை துறையில் ) திறன் மற்றும் பொது அறிவு பெற்றிருத்தல் வேண்டும் மற்றும் நிதி நடவடிக்கை சார்ந்த திறன் பெற்றிருத்தல் வேண்டும் . இத்துறையில் அனுபவமுள்ள பெண்கள் மற்றும் சமூக ரீதியாக பின் தங்கியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். நிதி நிறுவனங்கள் மற்றும் பிற துறைகளை ஒருங்கிணைத்து செயல்படும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் .மேலும் இந்த இரண்டு பணியிடங்களுக்கு பின்வரும் நிபந்தனைகள் பின்பற்றப்படுகிறது . மாத சம்பளம் ரூ .25000 / - + TA + Incentive 5 % of actual salary , விண்ணப்பங்கள் பதிவு அஞ்சல் மூலமோ அல்லது நேரிலோ சமர்பிக்கலாம் .
நிர்ணயிக்கப்பட்ட நாள் மற்றும் நேரத்திற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது . பெறப்பட்ட விண்ணப்பங்கள் ஓரிட சேவை மைய மேலாண்மைக் குழுவால் பரிசீலனை செய்து தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களை தேர்ந்தெடுத்து பின்னர் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள் . ஒரிட சேவை மையத்தின் விதிகளுக்குட்பட்டு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளவோ , நிராகரிக்கவோ ஓரிட சேவை மைய மேலாண்மைக் குழுவிற்கு முழு அதிகாரம் உண்டு .நேர்காணல் நடைபெறும் விபரம் அஞ்சல் வழியாகவோ ,அல்லது மின்னஞ்சலிலோ குறுஞ் செய்தியாகவோ அல்லது தொலைபேசியின் வாயிலாக விண்ணப்பதாரருக்கு தெரிவிக்கப்படும் என சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம் தெரிவித்துள்ளார் .