சேலம் மாவட்டத்தில் இன்று 526 மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது
சேலம் மாவட்டத்தில் இன்று 526 மையங்களில் 94,700 கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல்.
சேலம் மாவட்டத்தில் பல்வேறு மையங்களில் பல்வேறு கட்டங்களாக கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டத்தில் தற்போதுள்ள 94,700 டோஸ்கள் கையிருப்பின் அடிப்படையில் 01.10.2021 வெள்ளிக்கிழமை தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
ஊரகப்பகுதியில் உள்ள அனைத்து துணை சுகாதார நிலையங்கள் (398) அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் (87), நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் (4), அனைத்து அரசு மருத்துவமனைகள்(12), அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை மற்றும் சேலம் மாநகராட்சி பகுதியில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட்ட 24 மையங்கள் என மொத்தம் 526 மையங்களில் பொதுமக்களுக்கு கோவாக்சின் இரண்டாம் தவணை மட்டும் மற்றும் கோவிஷீல்டு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்படும் என மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.