மேட்டூர் அணையின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
Salem News- சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை (இன்று காலை 8 மணி நிலவரப்படி 59.5 அடியாக உள்ளது.
Salem News, Salem News Today- மேட்டூர் அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை (இன்று காலை 8 மணி நிலவரப்படி 59.54 அடியாக உள்ளது.
காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள மேட்டூர் அணை இந்தியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாகவும், தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணையாகவும் விளங்கி வருகிறது. தமிழகத்தின் பாசனத்துக்குத் தேவையான நீரின் பெரும்பகுதியை இது வழங்குகிறது.
தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சரிவதும் அவ்வபோது அதிகரிப்பதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் 1000 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 700 கன அடியாக சரிந்தது.
அதே சமயம், மேட்டூர் அணைக்கு கடந்த 3 நாட்களாக நீர்வரத்து 23 கன அடியாக நீடித்து வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 2) இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 16 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத் தேவைக்காக வினாடிக்கு 1,200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று காலை முதல் நீர் திறப்பு 2,200 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவை விட திறப்பு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று (திங்கட்கிழமை) 59.82 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 59.54 அடியானது. நீர் இருப்பு 24.34 டிஎம்சியாக உள்ளது.