மேட்டூர் அணையின் நீர்மட்டம் 57 அடி

Salem News- சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் திங்கட்கிழமை (இன்று) காலை 8 மணி நிலவரப்படி 57.86 அடியாக உள்ளது.

Update: 2024-04-08 06:30 GMT

Salem News- மேட்டூர் அணை.

Salem News, Salem News Today- மேட்டூர் அணையின் நீர்மட்டம் திங்கட்கிழமை (இன்று) காலை 8 மணி நிலவரப்படி 57.86 அடியாக உள்ளது.

காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள மேட்டூர் அணை இந்தியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாகவும், தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணையாகவும் விளங்கி வருகிறது. தமிழகத்தின் பாசனத்துக்குத் தேவையான நீரின் பெரும்பகுதியை இது வழங்குகிறது.

இந்நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின்மை காரணமாக, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து சரிந்த வண்ணமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து 200 கன அடியாக நீடிக்கிறது. அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று (7ம் தேதி) 50 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (8ம் தேதி) 73 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து கால்வாய் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2,200 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. வரத்தை காட்டிலும், நீர் திறப்பு பலமடங்கு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று 58.14 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று 57.86 அடியாக சரிந்துள்ளது. நீர் இருப்பு 23.11 டிஎம்சியாக உள்ளது.

Tags:    

Similar News