மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 147 கன அடியாக சரிவு
சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வெள்ளிக்கிழமை (மே.31) இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 389 கன அடியிலிருந்து 147 கன அடியாக சரிந்துள்ளது.
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வெள்ளிக்கிழமை (மே.31) இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 389 கன அடியிலிருந்து 147 கன அடியாக சரிந்துள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூரில் காவிரி ஆற்றின் குறுக்கே ஸ்டான்லி நீர்த்தேக்கம் எனப்படும் மேட்டூர் அணை அமைந்துள்ளது. இந்த அணை 120 அடி உயரமும், 93.4 டிஎம்சி கொள்ளளவும் கொண்டது. இந்நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.
ஒகேனக்கல் காவிரியில் வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,500 கன அடியாக இருந்த நிலையில், நேற்று காலை நிலவரப்படி 1,200 கன அடியாக குறைந்தது. அதே போல், மேட்டூர் அணைக்கு நேற்று (மே.30) வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 389 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (மே.31) வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 389 கன அடியாக சரிந்தது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 2,100 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை 47.04 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 46.73 அடியானது. நீர் இருப்பு 15.99 டிஎம்சியாக உள்ளது.