சங்ககிரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் பெண் ஊழியர் லஞ்சம் வாங்கும் வீடியோ வைரல்

சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பெண் ஊழியர் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைராகி வருகிறது.;

Update: 2022-01-08 07:00 GMT

சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கும் பெண் ஊழியர்.

சேலம் மாவட்டம் சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சி.பிரிவு உதவியாளராக பணியாற்றும் கவிதா  பொதுமக்கள் தரும் விண்ணப்பங்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் கால தாமதபடுத்தி, அதன் மூலம் லஞ்சம் பெற்ற பின்பு அதற்கான வேலைகளை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  

மேலும் மனுதாரர் ஒருவர் சான்றிதழ் பெறுவதற்காக லஞ்சம் கொடுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் அந்த வீடியோ காட்சியில் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் தெரிவிப்பதாக ஒருவர் கூறுகிறார் என்பதற்கு, அதற்கு நான் என்ன செய்ய முடியும் என்னிடம் ஏதாவது கேட்டால்  பையில் எடுத்து காண்பிப்பேன்.

மேலும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் என்ன கேட்கிறார்களோ அதற்கும் என்னால் பதிலளிக்க முடியும் என்று திமிராகப் அப்பெண் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News