சங்ககிரி: கொரோனா காய்ச்சல் பரிசோதனை

சங்ககிரியை அடுத்துள்ள காவேரிப்பட்டி ஊராட்சி பகுதிகளில் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா காய்ச்சல் பரிசோதனை நடைபெற்றது.;

Update: 2021-05-31 05:15 GMT

சங்ககிரியை அடுத்துள்ள காவேரிப்பட்டி ஊராட்சி பகுதிகளில் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா காய்ச்சல் பரிசோதனை  நடைபெற்றது.

கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் தீவிரமடைந்து வரும் நிலையில்  தமிழக அரசு முழு ஊரடங்கு அறிவித்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதுடன் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஊராட்சி பகுதிகளில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

இதனையடத்து சேலம் மாவட்டம் சங்ககிரி ஒன்றியத்துக்கு உட்பட்ட காவேரிப்பட்டி ஊராட்சி  ஒக்கிலிபட்டி பகுதியில் அரசிராமணி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் இன்று ஒரே நாளில்  50 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா காய்ச்சல் பரிசோதனை நடைபெற்றது.

மேலும் காவேரிப்பட்டி ஊராட்சி சார்பில் வீடு வீடாக சென்று ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களுக்கு காய்ச்சல் உள்ளதா என்று கணக்கீடும் பணி நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து காவேரிப்பட்டி ஊராட்சி உட்பட்ட  வட்ராம்பாளையம், ஓக்கிலிபட்டி, மோட்டூர், தண்ணீர்தாசனூர், மெய்ம்பளத்தான் காட்டுவளவு ஆகிய பகுதிகளில் தூய்மைப் பணியாளர்கள் கிருமிநாசினி தெளித்தும் பிளீச்சிங் பவுடர் போடுவது உள்ளிட்ட தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News