சேலம் அருகே அனுமதியின்றி தமிழ்நாடு கொடி ஏற்றம்: திராவிட விடுதலை கழகத்தினர் கைது
சேலம் அருகே அனுமதியின்றி தமிழ்நாடு கொடி ஏற்றிய திராவிட விடுதலை கழகத்தினரை போலீசார் கைது செய்தனர்.;
அனுமதியின்றி தமிழ்நாடு கொடியேற்றி கொண்டாடி திராவிடர் விடுதலை கழகத்தினர்.
பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக தமிழ்நாடு உருவான தினத்தை கொண்டாடும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பேருந்துநிலையம் அருகே திராவிடர் விடுதலை கழகத்தினர் அனுமதி இன்றி தமிழ்நாடு கொடி ஏற்றி முழக்கங்களை எழுப்பினர்.
இதனையடுத்து காவல்துறையினருக்கும் திராவிட விடுதலைக் கழகத்தினருக்கும் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. காவல்துறையில் முறையாக அனுமதி பெறாமல் பொது இடத்தில் கொடியேற்றப்பட்டதால் காவல்துறையினர் கோடியை உடனடியாக இறக்கி அகற்றினர். இதன் காரணமாக இளம்பிள்ளை பேருந்து நிறுத்தம் அருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல் சேலம் மாவட்டம் நங்கவள்ளி பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு கொடி ஏற்ற முயன்ற திவிக.,வினர் எட்டு பேரை தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்தனர்.