மகுடஞ்சாவடியில் பயிர் காப்பீடு திட்ட முகாம்; விவசாயிகளுக்கு அழைப்பு
சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடியில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் சேலம் மகுடஞ்சாவடி அடுத்த கண்டர் குலமாணிக்கம் பகுதியில் திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன்பெறும் வகையில் சிறப்பு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் வறட்சி, வெள்ளம், பூச்சிநோய் போன்ற இயற்கை இயற்பாடுகளால் ஏற்படும் மகசூல் இழப்புகளில் இருந்தும், கோடைகாலத்தில் சாகுபடி செய்யப்பட்ட நிலக்கடலை, சோளம் பயிர்களை பாதுகாக்கவும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஆகஸ்ட் 31.08 2021 தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
மேலும் நிலக்கடலைக்கு ஒரு ஏக்கருக்கு ரூபாய் 400 செலுத்தியும், சோளத்திற்கு ஒரு ஏக்கருக்கு ரூபாய் 167 செலுத்தியும் வணிக வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது சேவை மையங்களில் பதிவு செய்து கொள்ளலாம்.
இதற்கு தேவையான ஆவணங்கள் அடங்கல் மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்கள் கொண்டு பதிவு செய்து விவசாயிகள் பயன்பெற வேண்டுமென மகுடஞ்சாவடி வேளாண்மை உதவி இயக்குனர் மணிமேகலா தேவி தெரிவித்தார்.