சேலத்தில் அண்ணாமலைக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு
பாஜக தலைவராக பொறுப்பேற்கும் அண்ணாமலைக்கு, சேலத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து மேளதாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.;
சங்ககிரியில் உள்ள தீரன் சின்னமலை நினைவு மண்டபம் அருகே, பாஜக தலைவர் அண்ணாமலைக்கு, தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழகத்தின் பாஜக புதிய மாநில தலைவராக பொறுப்பேற்கவுள்ள அண்ணாமலை, சேலம் மாவட்டம் சங்ககிரிக்கு வருகை புரிந்தபோது, சேலம் மேற்க்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் பட்டாசு வெடித்து மேளதாளங்களுடன் உற்சாக வரவேற்பளித்தனர். இதை தொடர்ந்து சங்ககிரில் உலுள்ள தீரன் சின்னமலை நினைவு மணிமண்டபத்தில், தீரன் சின்னமலையின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசு, பல்வேறு நல்ல திட்டங்களை வழங்கி வருவதாகவும், தமிழகத்தில் திமுக அரசு அதற்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும், குற்றம்சாட்டினார். வரும் பாராளுமன்ற தேர்தலுக்குள் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி வலிமை அடைய செய்யவிருப்பதாக, அண்ணாமலை தெரிவித்தார். இதை தொடர்ந்து சேலம் நகரை அண்ணாமலை சென்றடைந்தார்.