வாக்கு பெட்டிகள் வைக்கும் அறை-தேர்தல் ஆணையம் உத்தரவு

Update: 2021-04-02 09:45 GMT

சேலம் மாவட்டத்தில் வாக்குப் பெட்டிகள் வைக்கும் அறை ஜன்னல்கள் மற்றும் கதவுகளில் கான்கிரீட் சுவர் எழுப்ப தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது .

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குப் பெட்டிகள் வைக்கும் அறை பகுதிகளில் உள்ள ஜன்னல்கள் முழுவதும் கடந்த தேர்தலின் போது மரப் பலகைகள் மூலம் மூடப்படும். ஆனால் தற்போது மரப்பலகைக்கு பதிலாக ஜன்னல்கள் முழுவதும் கான்கிரீட் சுவர் எழுப்ப தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதனடிப்படையில் சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்கு எண்ணிக்கை நடைபெறும் கல்லூரியில் வாக்குப் பெட்டிகள் வைக்கும் அறை வளாகத்திலுள்ள ஜன்னல்கள் முழுவதும் கான்கிரீட் சுவர்கள் எழுப்பப்பட்டு வருகிறது.

ஏப்ரல் 6 ம் தேதியிலிருந்து மே 2ம் தேதி வரை கிட்டத்தட்ட 1 மாத கால அளவில் வாக்குப் பெட்டிகளை பத்திரமாக பாதுகாக்க வேண்டிய சூழ்நிலை இருப்பதால் இந்த கான்கிரீட் சுவர் எழுப்ப படுவதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை மையம் தற்போது தயார்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News