சேலத்தில் நட்சத்திர ஓட்டல் பணியாளர்களுக்கு தடுப்பூசி முகாம்

சேலத்தில் நட்சத்திர ஓட்டல் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் முகாமை மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் ஜனார்த்தனன் தொடங்கி வைத்தார்.;

Update: 2021-06-28 13:30 GMT

கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று, அரசு அறிவித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட மையங்கள் மூலமாகவும், சிறப்பு முகாம்கள் மூலமாகவும், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக,   குரங்குச்சாவடி பகுதியிலுள்ள தனியார் நட்சத்திர விடுதியில், தென்மண்டல நட்சத்திர ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் ரெஸ்டாரன்ட் அசோசியேசன் சார்பில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமை, சேலம் மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் ஜனார்த்தனன் துவக்கி வைத்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓட்டல் பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

Tags:    

Similar News