சேலத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

சேலம் புதிய பேருந்து நிலையம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

Update: 2021-08-10 08:00 GMT

அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள். 

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் பணியாற்றும் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சேலம் புதிய பேருந்து நிலையம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு 2003 க்கு பிறகு பணியில் சேர்ந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 14வது ஊதிய ஒப்பந்தத்தை இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் அமல்படுத்தாமல் உள்ளனர், அதனை உடனடியாக அமல்படுத்த வேண்டும். ஓட்டுனர், நடத்துனர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யும் கட்டுப்பாட்டு பிரிவில் ஆளும் கட்சி நிர்வாகிகள் அமர்ந்து கொண்டு ஒருதலைபட்சமாக செயல்படும் முறையை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிய போக்குவரத்து தொழிற் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். பொதுச்செயலாளர் சிவகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட போக்குவரத்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் கலந்துகொண்டனர் .


Tags:    

Similar News