சேலம் நகர மலை அடிவாரத்தில் காவலர்களுக்கு துப்பாக்கி சுடும் போட்டி
சேலம் நகர மலை அடிவாரத்தில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் கோவை மண்டல காவல்துறையை சார்ந்த 60 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பங்கேற்பு.
சேலம் மாநகர காவல்துறை சார்பில் நகரமலை அடிவாரத்தில் புதிதாக துப்பாக்கி சுடும் தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா இன்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து கோவை மேற்கு மண்டல காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது.
இதில் சேலம் மற்றும் கோவை சரக டிஐஜிக்கள், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை, ஈரோடு உள்ளிட்ட 8 மாவட்ட எஸ்பிக்கள், டிஎஸ்பிக்கள், 3 நகர போலீஸ் கமிஷனர்கள், துணை கமிஷ்னர்கள், உதவி கமிஷனர்கள் மற்றும் போலீசார் என 60 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். தொடர்ந்து போட்டியில் வென்ற போலீஸ் அதிகாரிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.