சுதந்திரதினத்தையொட்டி சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு தீவிரம்
சுதந்திர தினத்தையொட்டி சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தையொட்டி சேலம் ஜங்சன் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய திருநாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழா நாளை நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி சேலம் ஜங்சன் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். ரயில் நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆர்பிஎஃப் வீரர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணித்து வருகின்றனர். மேலும் ரயில் பயணிகளின் உடைமைகள் மற்றும் ரயில் மூலம் எடுத்துச் செல்லப்படும் பார்சல்கள் தீவிர பரிசோதனைக்கு பின்னரே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறது.
இதேபோல் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் கொண்டு தீவிர பரிசோதனை செய்யப்பட்டது.