சேலம்: சூறாவளி காற்றுடன் பலத்த மழை

சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு .

Update: 2021-05-25 15:45 GMT

சேலத்தின் பல்வேறு பகுதிகளில் சூறாவளி காற்றுடன் இன்று பலத்த மழை.. சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு ..

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதன் அடிப்படையில் இன்று மாலை சேலத்தில் லேசாக பெய்த மழை நேரம் செல்லச்செல்ல பலத்த மழையாக மாறியது.

 தொடர்ந்து மழையோடு சேர்ந்து சூறைக் காற்று வீசியதால் ஆங்காங்கே பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. சுமார் ஒரு மணி நேரம் பெய்த தொடர் மழையின் காரணமாக ஆங்காங்கே சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகனங்கள் செல்பவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

சேலம் அரசு மருத்துவமனை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அம்மாபேட்டை, குகை, அஸ்தம்பட்டி, பள்ளப்பட்டி, 5 ரோடு, சூரமங்கலம், கொண்டலாம்பட்டி போன்ற பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை காரணமாக ஆங்காங்கே தண்ணீர் தேங்கியாதால் நகராட்சி ஊழியர்கள் சாலையில் உள்ள  தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து சேலத்தில் தற்போது குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

Tags:    

Similar News