சேலம் ஜங்ஷன் ரயில்நிலையம் முன்பு மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

சலுகைகள் ரத்து செய்யபட்டதை கண்டித்து 100 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2021-08-11 06:45 GMT

மாற்றுத்திறனாளிகளின் ரயில் பயன சலுகைகள் ரத்து செய்ப்பட்டதை  கண்டித்து  சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மாற்றுத்திறனாளிகள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம் முன்பு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள்  மற்றும் பாதுகாப்போர் உரிமைகள் சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் ரத்து செய்யபட்டதை கண்டித்து 100 க்கும் மேற்பட்ட  மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கமிட்டனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்கெனவே வழங்கி வந்த ரயில் கட்டண சலுகைகள் பயன்கள் பறிக்கபட்டதை மீண்டும் வழங்க வேண்டும், ரயில்வே பிளாட்பார்ம் 50ருபாய் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், சாதாரண காலங்களை விட கூடுதலான கட்டணத்தை செலுத்தி அவசர தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும் என ஆர்ப்பட்டத்தின் வாயிலாக வலியுறுத்தினர். மேலும், புதுச்சேரி, சண்டிகார் போன்ற யூனியன் பிரதேசங்களில் வழங்குவதை போன்று  மாற்றுத்திறனாளிகளுக்கும் பெட்ரோல் மானியம் வழங்கிட வலியுறுத்தினர்.

Tags:    

Similar News