ரூ. 86 லட்சம் கையாடல் செய்த பில் கலெக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம்

மக்கள் வரிப்பணத்தை கையாடல் செய்த மாநகராட்சி பில் கலெக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டம்.

Update: 2021-08-16 09:15 GMT

86 லட்ச ரூபாய் கையாடல் செய்த மாநகராட்சி பில் கலெக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டம் .

சேலம் கொண்டலாம்பட்டி மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் மக்களிடம் வசூல் செய்யப்பட்ட பணத்தை முறைகேடு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்த ஆய்வில் சுமார் 86 லட்ச ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட பில் கலெக்டர் மீது நடவடிக்கை எடுக்க மாநாகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் பொது மக்களிடமிருந்து வசூல் செய்யப்பட்ட பணத்தை வைத்து முறைகேட்டில் ஈடுபட்ட பில் கலெக்டர் மீதும், வருவாய்த்துறை ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 80 லட்ச ரூபாய் பணம், முட்டையாக இருப்பது போன்று மூட்டை கட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எடுத்து வந்து ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

 மக்கள் வரிப்பணத்தை சூறையாடும் மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், 86 லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து கையாடல் செய்யப்பட்ட பணத்தை திரும்ப பெற வேண்டும், இதற்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

 86 லட்ச ரூபாய் பணத்தை தலை மீது மூட்டை கட்டி எடுத்து வந்தது போல் சித்தரித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News