சேலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

அரசு பணிகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சேலம் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Update: 2021-09-20 09:00 GMT

சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த இளைஞர்கள்.

தமிழக அரசு பணிகளில் ஏற்கனவே பெண்களுக்கான 30 சதவிகித இட ஒதுக்கீடு திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 40 சதவீதம் ஆக அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் அரசுப் பணிகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு முறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு தேர்வாணைய தேர்வர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பெண்களுக்கான 40 சதவிகித இட ஒதுக்கீட்டை வரவேற்பதாக கூறும் இவர்கள் இந்த இட ஒதுக்கீட்டினால் தேர்வு எழுதும் இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளதாக வேதனை தெரிவித்தனர்.

ஏற்கனவே உள்ள 30 சதவிகித இட ஒதுக்கீட்டை முறைப் படுத்தாத நிலையில் தற்போது கூடுதல் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதால் சுமார் 80 விழுக்காடு அரசுப் பணிகளில் பெண்கள் மட்டுமே சேர வாய்ப்பு உருவாகியுள்ளதாக இளைஞர்கள் கருத்து தெரிவித்தனர்.

எனவே பெண்களுக்கான 40 சதவிகித இட ஒதுக்கீட்டில் செங்குத்து (vertical) முறையை நீக்கி, கிடைமட்ட (Horizandal) முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் இளைஞர்கள் கோரிக்கைவிடுத்தனர்.

Tags:    

Similar News