மதுக்கடைகள் திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக ஆர்ப்பாட்டம்

கொரோனோ பெருந்தொற்று காலத்தில் மதுக்கடைகள் திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக எம் எல் ஏ ஆர்ப்பாட்டம்;

Update: 2021-06-17 09:45 GMT

தமிழக அரசு மதுக்கடைகளை திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் பாமக மேற்கு தொகுதி எம்எல்ஏ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

தமிழகத்தில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு மதுக்கடைகளை மூட வலியுறுத்தி சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அஸ்தம்பட்டி எம்டிஎஸ் நகரில் சட்டமன்ற உறுப்பினரின் இல்லம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் பாமக மாநகர் மாவட்ட செயலாளர் இராசரத்தினம் பசுமை தாயக மாநில இணை செயலாளர் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

போராட்டத்தின் போது மக்கள் மீது அக்கறை கொள்ளாமல் திமுக அரசு மதுக்கடைகளை திறந்து வைத்திருப்பதாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த கோரி பல்வேறு அரசியல் அமைப்புகளும் கோரிக்கை வைத்து வரும் நிலையில் கொரோனா தொற்று நீடித்து வரும் காலத்தில் மதுக்கடைகளை திறப்பது நியாயமா  என கேள்வி எழுப்பப்பட்டது. தமிழகத்தில் மதுக்கடைகளை மூடும் வரை போராட உள்ளதாக அரசுக்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Tags:    

Similar News