சேலம் மாநகராட்சி பகுதியில் கபசுர குடிநீர், அமுக்காரா சூரணம் வழங்கும் முகாம்

சேலம் மாநகராட்சியில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர், அமுக்கரா சூரணம் வழங்கும் முகாமை ஆணையர் துவக்கிவைத்தார்;

Update: 2021-08-06 11:00 GMT

சேலம் மாநகராட்சி சார்பாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்  கபசுர குடிநீர், அமுக்காரா சூரணம் வங்கும் முகாமமை ஆணையர் தொடங்கிவைத்தார்.

கொரோனா நோய் தொற்று தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு வாரம் 01.08.2021 முதல் 07.08.2021 வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஆறாவது நாளான இன்று சித்த மருத்துவத்தின் மூலம் நோய் எதிர்ப்பு ஆற்றலை பெருக்கக் கூடிய கபசுர குடிநீர், அமுக்கரா சூரண மாத்திரை வழங்கும் முகாம் நடைபெற்றது.

சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலம் சுவர்ணபுரி மாநகராட்சி துவக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமை மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் துவக்கிவைத்தார்.

இதில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கடுக்காய் பொடி, சுக்குப் பொடி, துளசிப் பொடி, நெல்லிப் பொடி, சூரணம் ஆகிய பொருட்கள் அடங்கிய பெட்டகமும், கபசுர குடிநீரும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

தொடர்ந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வாசகம் அடங்கிய துண்டு பிரசுரமும் வழங்கப்பட்டது.

சித்த மருத்துவ துறையின் மூலம் வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளை பொதுமக்கள் தவறாமல் கடைபிடித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துகொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் கேட்டுக்கொண்டார்.


Tags:    

Similar News