சேலம் போலீசாருக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கல்!

சேலத்தில், காவல்துறையினருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வகையில், 5000 மாத்திரைகளை பயோ மைக்ரான் நிறுவனத்தினர் வழங்கினர்.

Update: 2021-05-27 14:52 GMT

சேலம் மாவட்டத்தில் நாளொன்றுக்கு 900 பேர் நோய் தொற்று ஏற்பட்டு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில்,  இரவு பகல் பாராமல் போலீசார் பணியாற்றி வருகின்றனர். காவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு வருகிறது. ஒரு சில காவலர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் காவலர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் பல்வேறு விதமான உடலில் சக்திகள் அதிகரிக்கவும் பயோ பார்மா நிறுவனத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட காவலர்களுக்கு,  ஒரோவிட் என ப்படும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் சக்தி மாத்திரைகள், அந்தந்த மாவட்டங்களில் காவல்துறை ஆணையாளரிடம் வழங்கப்பட்டு வருகிறது.

அவ்வகையில், சேலத்தில் பயோ மைக்ரா நிறுவனத்தின் சார்பில்  காவலர்களுக்கு  நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க மாத்திரைகள் வழங்கப்பட்டது. பயோ மைக்ரா நிறுவனர் சுரேஷ்குமார் அறிவுறுத்தலின்படி, மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில், சேலம் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் காவலர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அடங்கிய 5000 மாத்திரைகளை, காவல் ஆணையாளர் சந்தோஷ்குமாரிடம் பயோ மைக்ரோ நிறுவனத்தின் மேலாளர் பாபு வழங்கினார்.

மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ்குமார் கூறுகையில், தற்போதுள்ள சூழ்நிலையில், காவலர்களுக்கு இந்த நோய் எதிர்ப்பு அதிகரிக்கும் மாத்திரை மிகவும் உறுதுணையாக இருக்கும். சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவலர்களுக்கும் இது வழங்கப்படும் என்றார்.

Tags:    

Similar News