சேலத்தில் கனமழை: 20க்கு மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த மழைநீர்

சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. சேலத்தில், கனமழையால் 20க்கு மேற்பட்ட வீடுகளில் மழைநீர் சூழ்ந்தது.;

Update: 2021-09-24 05:30 GMT

சேலத்தில் பெய்த மழையால்,  அழகாபுரம் பகுதி மாரிமுத்து கவுண்டர்தெரு, பூசாரி தெரு பகுதிகளில் உள்ள 20-க்கும் மேற்பட்ட வீடுகளை சூழந்த மழைநீர்.

சேலம் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இது, நேற்றும் தொடர்ந்தது. நேற்றிரவு சேலம் நகரம், ஆத்தூர், வாழப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்தது. கனமழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. அதிகபட்சமாக  பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் 105 மில்லி மீட்டர் அளவிற்கு மழையின் அளவானது பதிவாகியுள்ளது.

சேலம் மாநகரில், கனமழையின் காரணமாக அழகாபுரம் பகுதியில் உள்ள மாரிமுத்து கவுண்டர்தெரு, பூசாரி தெரு ஆகிய பகுதிகளில் உள்ள 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் சூழ்ந்தது. இதனால், அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இரண்டு தெருக்கள் முழுவதும் தண்ணீர் அதிகளவில் நிற்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல்  அவதிப்பட்டனர். தகவலறிந்து வந்த மாநகராட்சி ஊழியர்கள், மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News