சேலம் மாநகராட்சியில் இன்று காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள்
சேலம் மாநகராட்சி பகுதிகளில், இன்று காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் விவரம் பின்வருமாறு:;
சேலம் மாநகராட்சியில் கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில், காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அப்பகுதியில் உள்ள அனைவரும் பரிசோதிக்கப்பட்டு வருகின்றனர்.
அவ்வகையில், சேலம் மாநகராட்சி பகுதிகளில் இன்று காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை மாமாங்கம், மெய்யனூர், நெடுஞ்சாலை நகர், வசக்காட்டு காலனி, தென் அழகாபுரம், கோரிமேடு, ஜான்சன் பேட்டை மேற்கு, சொர்ணாமிகை தெரு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும்; 12.00 முதல் 2.00 மணி வரை ஸ்ரீ ராம் நகர், அந்தோனிபுரம், அம்மன் நகர், அண்ணாமலை தெரு, சாரதா காலேஜ் ரோடு, டி.வி.எஸ் காலனி, வெங்கடேசபுரம், கன்னார தெரு, வாசக சாலை, ஹவுசிங் போர்டு குறிஞ்சி நகர், பிடாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெறும்.
மேலும், நண்பகல் 3.00 மணி முதல் 5.00 மணி வரை ஜாகீர் அம்மாபாளையம் காமராஜர் தெரு, சோளம்பள்ளம் சக்கரைபுளியமரம், நேரு தெரு, சின்னப்பன் தெரு, போயர் தெரு, ராஜா நகர், நாராயண பிள்ளை தெரு, வெங்கடசாமி தெரு, காமராஜர் நகர் புதுத்தெரு,உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் என 45க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெறுகிறது.
எனவே, காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்களை, பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.