சேலம் மாநகராட்சியில் இன்று காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெறும் இடங்கள்

சேலம் மாநகராட்சியில் இன்று காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் விவரம் வருமாறு:;

Update: 2021-06-26 03:04 GMT

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் இன்று காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை அபிராமி கார்டன், ஸ்டேட் பேங்க் காலனி, ராஜாஜி தெரு, விநாயக கார்டன்,தென் அழகாபுரம், என்.ஜி.ஜி.ஒ.காலனி, கோவிந்தன் தெரு, மேட்டு பிள்ளையார் தெரு,வள்ளுவர் காலனி, அக்ரஹாரம், ஜோதி மெயின் ரோடு, பசுபதி குருநாதன் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இன்று பிற்பகல் 12.00 முதல் 2.00 மணி வரை ரெட்டியூர் ஓம்சக்தி நகர், அந்தோணிபுரம், மெய்யன் தெரு, பள்ளப்பட்டி மருத நாயகம் தெரு, சின்ன புதூர், திருநகர், சுப்ரமணியபுரம் அனெக்ஸ், செவ்வாய்ப்பேட்டை சையத் மதார் தெரு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெறவுள்ளது.

மேலும், இன்று நண்பகல் 3.00 மணி முதல் 5.00 மணி வரை சன்னதி தெரு, கபிலர் தெரு,சூரமங்கலம் மெயின்ரோடு, ரத்தினசாமிபுரம், சரஸ்வதி நகர், பிள்ளையார் நகர், சின்ன புதூார், கோட்டை ஹபீப் தெரு பகுதிகள் என 48 இடங்களில் இந்த சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெறும் என்று, மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News