சேலம் மாநகராட்சி: 50 க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள்..!
சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் நாளை 50 க்கும் மேற்பட்ட இடங்களில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் நாளை 50 க்கும் மேற்பட்ட இடங்களில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
சேலம் மாநகராட்சியில் கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சிப் பகுதிகளில் நோய் தொற்று அறிகுறி உள்ளவர்களை வீடு வீடாகச் சென்று கண்டறிந்து அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்கும் வகையில் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அப்பகுதியில் உள்ள அனைவரும் பரிசோதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மாநகராட்சிப் பகுதிகளில் நாளை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை பொறியாளர் காலனி, ஸ்டேட் பேங்க் காலனி, பெரியார் தெரு, விநாயகா கார்டன், குட்ட தெரு, சட்டக்கல்லூரி சாலை, உள்ளிட்ட பகுதிகளிலும், பிற்பகல் 12.00 முதல் 2.00 மணி வரை பெருமாள் மலை அடிவாரம், அழகு நகர், ஆண்டிப்பட்டி காலனி, அல்ராஜ் தெரு, உள்ளிட்ட பகுதிகளிலும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெறும்.
மேலும், நண்பகல் 3.00 மணி முதல் 5.00 மணி வரை காளியம்மன் கோவில் தெரு, சோளம்பள்ளம், திருவாக்கவுண்டனூர் கண்ணகி தெரு, லாட குப்பன் தெரு, மெய்யனூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் என நாளை 50 க்கும் மேற்பட்ட இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெறும் என்றும், சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் தீவிர கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நடைபெற்று வரும் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்களை, முகாம் நடைபெறும் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.