சேலத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் கொண்டாட்டம்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக் கோவிலில் சிறப்பு யாகம்.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் வறுமை ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி நிர்வாகிகளும் தொண்டர்களும் கொண்டாடி வருகின்றனர்.
அதனடிப்படையில் சேலம் மாநகர மாவட்ட சார்பில், கேப்டன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. சேலம் செவ்வாய்பேட்டை பகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கேப்டன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டி சிறப்பு பூஜைகள் மற்றும் யாகம் நடைபெற்றது.
செவ்வாய்பேட்டை பகுதி செயலாளர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு பூஜையில், கழக கொள்கை பரப்புச் செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ் மாநகர மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கலந்து கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து வெட்டிவேர், ஜாதிக்காய் கருஞ்சீரகம் உள்ளிட்ட 108 மூலிகைகளால் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க சிறப்பு யாகத்தில் பூர்ணாஹுதி வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை பெண்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டு, 200 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.