மாற்றுத்திறனாளிக்கு 3 சக்கர நாற்காலி வழங்கிய மாவட்ட ஆட்சியர்

சேலத்தில் கடந்த 5 ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைந்த மாற்றுத்திறனாளிக்கு அரை மணி நேரத்தில் 3 சக்கர நாற்காலி வழங்கிய மாவட்ட ஆட்சியர்.

Update: 2021-06-22 14:45 GMT

சேலம் மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான பாண்டியன் என்பவருக்கு மூன்று சக்கரம் வாகனத்தை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வழங்கினார்.

சேலம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பாண்டியன். விபத்து ஒன்றில் காலில் அடிப்பட்டு ஊனமடைந்த இவர். 3 சக்கர வாகனம் மற்றும் மாத உதவித்தொகை கேட்டு கடந்த 5 ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில் மனு அளித்தும் இதுவரை பலனில்லாமல் இருந்தது.

இந்த நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் கார்மேகத்தை நேரில் சந்தித்து தனது கோரிக்கையை மனுவாக வழங்கினார். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் விரைவில் மாத உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததோடு மனு வழங்கிய அரை மணி நேரத்தில் அவருக்கு 3 சக்கர வாகனத்தை வழங்கினார். பின்னர் ஆட்சியருக்கு மாற்றுத்திறனாளி கண்ணீர் மல்க நன்றி தெரிவித்து சென்றார்.

Tags:    

Similar News