பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சைக்கிள் பேரணி
சேலத்தில், பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து, காங்கிரஸ் கட்சியின் சார்பில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.;
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில், சைக்கிள் பேரணி நடைபெற்றது. சேலம் ஜங்சன் பகுதியில் தொடங்கிய இந்த பேரணி, 5 ரோடு, 4ரோடு, ஆட்சியர் அலுவலக சாலை வழியாக பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகே நிறைவு பெற்றது.
இந்த பேரணியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு பேரணியில் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட்டனர். சேலம் மாநகர மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற சைக்கிள் பேரணியில், 100க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.