பயணி மாஸ்க் அணியாவிட்டால் நடத்துனர் மீது நடவடிக்கை: போக்குவரத்து துறை

பேருந்தில் பயணிகள் மாஸ்க் அணியாமல் இருந்தால், நடத்துனர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-07-17 01:21 GMT

தமிழகத்தில் கொரானா இரண்டாவது அலை பெருமளவு குறைந்துள்ளதை அடுத்து, பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சேலம் கோட்டத்தில் 80 சதவீத அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

சேலம் கோட்ட போக்குவரத்து அதிகாரிகள் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் அவ்வப்போது சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது ஓட்டுநர்கள் நடத்துனர்கள் மாஸ்க் அணிந்து உள்ளனரா என்பதையும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அப்போது பயணிகள் மாஸ்க் அணியாமல் இருந்தால், அந்த பேருந்தில் நடத்துனர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிந்துள்ளனரா என்பதை நடத்துனர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது,  சேலம் கோட்டத்தில் கொரானா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பேருந்துகளில் பல்வேறு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வருவதாகவும் கட்டுப்பாடுகளை பின்பற்றாத ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News