ஆணி படுக்கை மீது 5 நிமிடம் பரதநாட்டியம்: சேலம் மாணவி உலக சாதனை
சேலத்தில் உலக சாதனை முயற்சியாக ஆணி படுக்கை மீது பரதநாட்டியம் ஆடி மாணவி உலக சாதனை படைத்துள்ளார்.;
ஆணிப் படுக்கையில் பரதநாட்டியம் ஆடிய மாணவி.
சேலம் நெத்திமேடு பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் கலைச்செல்வியின் மகள் கனிஷ்கா. இவர் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் யோகா மீது கொண்ட ஆர்வத்தால் பல்வேறு உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக நோபல் உலக சாதனை முயற்சியாக பிராணயாமம் மூச்சுப் பயிற்சியில் 6 நிமிடத்தில் 86 பலூன்களை மூக்கில் ஊதி உலக சாதனை முயற்சி செய்தார்.
ஆணி படுக்கையில் பரதநாட்டியம் ஆடி உலக சாதனை சான்றிதழை பெறும் கல்லூரி மாணவி சங்கவி.
அதனைத் தொடர்ந்து சங்கவி என்ற கல்லூரி மாணவி பரதநாட்டியத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் பல்வேறு அரங்கேற்றங்கள் செய்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக இன்று பானை மீது ஐந்து நிமிடம் நின்று பரதநாட்டியம் ஆடினார். அதனைத் தொடர்ந்து ஆணி படுக்கையின் மீது ஐந்து நிமிடம் பரத நாட்டியம் ஆடி உலக சாதனை படைத்தார். தொடர்ந்து மாணவிகளுக்கு உலக சாதனை சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.