சேலம் அண்ணா பூங்காவை தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்
தமிழகத்தில் நாளை முதல் பொழுதுபோக்கு பூங்காக்கள் செயல்படாம் என அறிவிக்கப்பட்டதால் சேலம் அண்ணா பூங்காவை தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்
தமிழகத்தில் கொரானா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது . இதன் அடிப்படையில் நாளை முதல் தமிழகத்தில் அனைத்து பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இடங்களுக்கும் , அண்ணா பூங்கா, உயிரியல் பூங்கா மற்றும் தாவரவியல் பூங்கா போன்றவை இயங்கும் என தமிழக அரசு அறிவித்தது.
இந்த நிலையில் சேலம் அண்ணா பூங்கா, உயிரியல் பூங்கா மற்றும் பல்வேறு பூங்காக்கள் பொதுமக்கள் பார்வைக்காக தயார்படுத்தும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர் .
மேலும் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளம் தூய்மை படுத்தப்பட்டு, தண்ணீர் நிரப்பும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்
நாளை முதல் சுற்றுலா தலங்களுக்கு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இடங்களுக்கும் பொதுமக்கள் வருவார்கள் என்பதால் அங்கு தூய்மை பணிகளையும், கொரானா தொற்றை தடுக்கும் வகையில் பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகளையும் சம்பந்தப்பட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது.