எடப்பாடி முன்னிலையில் அமமுக நிர்வாகிகள் அதிமுகவில் ஐக்கியம்

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அமமுக நிர்வாகிகள் 13 பேர், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.;

Update: 2021-07-24 07:30 GMT

அமமுக மாநில இளைஞரணி தலைவர் ஜோதிவாணன் உள்பட திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அமமுக நிர்வாகிகள் 13 பேர்,  எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். 

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அமமுக நிர்வாகிகள் 13 பேர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அமமுக மாநில இளைஞரணி தலைவர் ஜோதிவாணன், திருச்சி மாவட்ட அமமுக இளைஞரணி செயலாளர் பாலாஜி, மாவட்ட பேரவை தலைவர் ராஜா, மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் சரவணன், மாவட்ட மாணவரணி தலைவர் பாபு, மாவட்ட அமைப்பு செயலாளர் சொக்கலிங்கம், மாநகர வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் கௌசல்யா, நெசவாளர் அணி செயலாளர் சீனிவாசன் ஆகியோர் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை, சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் சந்தித்து தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

அதேபோல் திருச்சி மாவட்டம் மலைக்கோட்டை பகுதி செயலாளர் வேலு, பாலகரை பகுதி செயலாளர் கண்ணன், ஏர்போர்ட் பகுதி செயலாளர் நாகராஜ், 19வது வட்ட கழக செயலாளர்கள் கணேசன், 35வது வட்ட கழக செயலாளர் சரவணன் ஆகியோர் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். புதியதாக அதிமுகவில் இணைந்தவர்களுக்கு இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.

Tags:    

Similar News